பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை'
First Published : 31 May 2009 11:45:00 PM IST
Last Updated :
கொழும்பு, மே 30: பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் சனிக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதை அவர் மேற்கொண்டு விவரிக்கவில்லை.
அகதிகள் முகாமில் உள்ள முதியவர்கள் முதுமையாலும் பல்வேறு வியாதிகளாலும் அவதிப்படுகின்றனர்.
அவர்களுக்கு உதவிகள் செய்யும் அளவுக்கு முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே அவர்களை அவரவர் மகன், மகள், இதர உறவினர்களுடன் சேர்ந்து தங்க அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது.
ஆனால் பிரபாகரனின் பெற்றோர் மட்டும் பிற உறவினர்களுடன் சேர முடியாமல் தனித்து வைத்தே பராமரிக்கப்படுவர் என்று தெரிகிறது.
முகாமில் பிரபாகரனின் தந்தை ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், தாயார் சாவதானமாக இருக்கிறார் என்று காட்டும் புகைப்படங்கள் கொழும்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரபாகரனின் பெற்றோருடன், போரில் உயிரிழந்த பிற விடுதலைப் புலிகளின் குடும்பத்தவரும் தங்கியிருக்கின்றனர்.
பிரபாகரனின் இதர உறவினர்கள், உயிரிழந்த பிற விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் உறவினர்களுடன் சேர்த்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குள் இடம் பெயர்ந்த பிற தமிழர்களின் முகாம்களைவிட இந்த முகாம்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன.
இங்கு உணவு, சுகாதாரம், மருத்துவ வசதி போன்றவை நன்றாக இருக்கின்றன என்று இலங்கைப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் வசை: விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேராத சாதாரணத் தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்கள் அடிப்படை வசதிகள் குறைவாகவும் போதிய அளவுக்கு உணவு தராத நிலையிலும் மோசமாக பராமரிக்கப்படுகின்றன.
அந்த முகாமில் இருப்பவர்கள் தங்களுடைய அவல நிலைக்கு பிரபாகரன்தான் காரணம் என்று வசைபாடுகின்றனர்.
பிரபாகரன் இரட்டை வேடம் போட்டதாகவும், போர் உச்ச கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே தன்னுடைய உறவினர்களையும் பெற்றோரையும் இலங்கை அரசு நடத்திய முகாம்களுக்கு அனுப்பிவைத்ததாகவும் தங்களுடைய பெற்றோர்களை மட்டும் கடைசி வரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதாகவும் அவர்கள் குறை கூறுகின்றனர்.
இலங்கையில் இனப்படுகொலைக்குப் பிறகு ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது பிரபாகரனின் பெற்றோர்களும் திருச்சிக்கு சென்று அங்கு நீண்ட காலம் வசித்தனர். பிறகு நார்வே தலையீட்டின் பேரில் சமாதானப் பேச்சு தொடங்கியபோது 2003-ல் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினர். அதுமுதல் இலங்கையிலேயே தங்கி வசிக்கின்றனர்.
திருச்சியிலிருந்து பிரபாகரனின் பெற்றோர் இலங்கையில் உள்ள வவுனியாவுக்குத் திரும்பியபோது கனடா நாட்டில் வசித்த அவர்களுடைய மகள் வினோதினியும் அவருடைய கணவர் ராஜேந்திரனும் உடன் வந்தனர்.
இத்தகவல்களை "தி ஐலண்ட்' பத்திரிகைத் தெரிவிக்கிறது.

5/31/2009 4:16:00 PM
5/31/2009 4:15:00 PM
5/31/2009 4:09:00 PM
5/31/2009 3:59:00 PM
5/31/2009 3:53:00 PM
5/31/2009 3:32:00 PM
5/31/2009 3:09:00 PM
5/31/2009 2:53:00 PM
5/31/2009 2:36:00 PM
5/31/2009 2:31:00 PM
5/31/2009 2:28:00 PM
5/31/2009 2:25:00 PM
5/31/2009 2:15:00 PM
5/31/2009 1:53:00 PM
5/31/2009 1:14:00 PM
5/31/2009 10:56:00 AM
5/31/2009 4:57:00 AM
5/31/2009 4:13:00 AM